EXECUTIVE SUMMARY IN TAMIL
இன்ஃப்லெக்ஷன் பாயிண்ட் இன்டர்நேஷனல்
லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் முற்றிலும் டிஜிட்டல் ஊடக தொழில்முனைவோரின் தாக்கம், புதுமை, அச்சுறுத்தல்கள் மற்றும் நிலைத்தன்மை பற்றிய ஆய்வு
ABOUT US
This report was created by
thanks to support from
with additional support from
அறிக்கை சுருக்கம்
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் தொற்றுநோய் பூட்டுதல்கள் பரவியதால், விளம்பர விகிதங்கள் வீழ்ச்சியடைந்தன. செய்தி ஆய்வாளர்கள் செய்தி நிறுவனங்களுக்கான “அழிவு நிலை நிகழ்வு” பற்றி எச்சரித்தனர்.
செம்ப்ராமீடியாவில் நாங்கள் உடன் பணிபுரியும் சுயாதீன முற்றிலும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் இந்த நெருக்கடி எவ்வாறு பாதித்தது என்பதைப் பற்றி கவலைப்பட்டோம். இந்த புதிய மீடியா அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதைப் பார்க்க 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பெரிய அளவிலான ஆராய்ச்சித் திட்டத்தைத் தொடங்கினோம். 2016 இல் எங்கள் முதல் இன்ஃப்லெக்ஷன் பாயின்ட் படிப்பில் இருந்து என்ன மாற்றம் ஏற்பட்டது என்று பார்த்தோம்.
இந்த விரிவான ஆய்வில் பங்கேற்ற 200 முற்றிலும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் பெரும்பாலானவை பாரம்பரிய மீடியா நிறுவனங்கள் அனுபவித்த பெரிய நிதி இழப்பை சந்திக்கவில்லை என்பதை கண்டு நாங்கள் நிம்மதி அடைந்தோம். இது முதன்மையாக இந்த நிறுவனங்கள் விளம்பரங்களை அதிகம் சார்ந்து இல்லை என்பதாலும், 2020 ல் ஊடகங்களுக்கான மானிய நிதி அதிகரித்ததாலும் என்று எங்கள் பகுப்பாய்வு கூறுகிறது.
எங்கள் முதல் இன்ஃப்ளெக்ஷன் பாயின்ட் ஆய்வில், அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா மற்றும் மெக்சிகோவில் 100 முற்றிலும் டிஜிட்டல் ஊடக தொழில்முனைவோரை நாங்கள் நேர்காணல் செய்தோம். இந்த அறிக்கைக்கு, லத்தீன் அமெரிக்காவில் உள்ள அதே நான்கு நாடுகளில் 100 நேர்காணல்களை நடத்துவதைத் தவிர, நாங்கள் மேலும் எட்டு நாடுகளைச் சேர்த்து, ஆப்பிரிக்காவில் உள்ள 49 டிஜிட்டல் ஊடக நிறுவனங்களின் ஊடகத் தலைவர்களை நேர்காணல் செய்தோம்: கானா, கென்யா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து; மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 52: இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் தாய்லாந்தில் இருந்து.
பிராந்திய மேலாளர்கள் தலைமையில் 23 உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவுடன், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் மொழிகளில் நேர்காணல்களை நடத்தினோம். நேர்காணல்கள் 2 முதல் 3 மணி நேரம் நீடித்தது. பத்திரிகை உள்ளடக்கம் மற்றும் தாக்கம், ஊடக சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர் பாதுகாப்பு, வருவாய் ஆதாரங்கள் மற்றும் செலவுகள், குழு அமைப்பு மற்றும் அனுபவம், சமூக ஊடக பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புதுமைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 500 கேள்விகளை கேட்டோம்.
எதிர்பார்க்கக்கூடியவாறு, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள டிஜிட்டல் செய்தி ஊடகங்களிடையே பிராந்திய வேறுபாடுகள் இருந்தன. இந்த அறிக்கையில் இவற்றை உள்ளடக்கியுள்ளோம். ஆனால் நாங்கள் தரவுகளை விமர்சனம் செய்தபோது எங்களை மிகவும் கவர்ந்தது என்னவென்றால் இந்த செய்தி நிறுவனங்கள் தங்கள் சமூகங்களை பற்றிய தகவல்களை முழுமையாக எழுதவும் நிலையான வணிக மாதிரிகளை உருவாக்கவும் முயலும் போது அவர்களிடையே தோன்றிய ஒற்றுமைகள்.
ஓரளவு சிறிய வரவு செலவுத் திட்டங்களுடன் பெரும்பாலானவை இயங்கினாலும், தங்கள் அணிகள் மற்றும் வளங்களின் அளவோடு ஒப்பிடும்போது அவற்றின் எடைக்கு மேல் வலுவுடன் செயல்படுகின்றன. பலர் புலனாய்வு மற்றும் தரவு இதழியலில் நிபுணத்துவம் பெற்றவர்கள். மேலும், 50% க்கும் அதிகமானவர்கள் தங்கள் பணிக்காக தேசிய அல்லது சர்வதேச விருதுகளை வென்றுள்ளனர்.
இன்ஃப்லெக்ஷன் பாயிண்ட் இன்டர்நேஷனல் லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் டிஜிட்டல் நேட்டிவ் மீடியாவின் நிலை குறித்து ஆழ்ந்த மற்றும் பரந்த ஆராய்ச்சியை பிரதிபலிக்கிறது. தொற்றுநோயை தாண்டி வந்தும் வராத நமது உலகில் பல விஷயங்களைப் போலவே, நாங்கள் இந்த ஆய்வில் கண்டறிந்தது கவலைக்கிடமான அச்சுறுத்தல்கள் மற்றும் ஊக்கமளிக்கும் முன்னேற்றங்களின் கலவையாகும்.
இந்த ஆய்வில் உள்ள டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் மன உறுதியான ஊடக நிறுவனர்களால் கட்டப்பட்டன. குறைந்த ஆதாரங்கள் இருந்தபோதிலும் ஊழல் நிறைந்த அரசாங்கங்களையும் வன்முறைவாய்ந்த சர்வதேச கார்டெல்களையும் எதிர்க்க தயாராக உள்ளவர்கள் இவர்கள். அவர்களில் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை பணய வைக்கிறார்கள் – ஆக மோசமான நிலையில், அவர்களின் உயிரையும் பணயவைக்கிறார்கள்.
ஆனால் இந்த அறிக்கை உதவிக்கான கூக்குரலோ அல்லது சிக்கலில் இருக்கும் ஊடக அமைப்புகளை பிணை எடுப்பதற்கான வேண்டுகோளோ அல்ல – உண்மையில் நாங்கள் பேட்டி கண்ட பல ஊடக நிறுவனர்கள் உதவி கேட்க தயங்கினர்.
அடுத்தடுத்த பக்கங்களில் எங்கள் குறிக்கோள், தங்களுக்கு தகுதியான அங்கீகாரத்தைப் பெறத் தொடங்கும் இந்த முக்கியமான மீடியா நிறுவனங்களைப்பற்றி வெளிச்சம் காட்டுவதுதான். இந்த ஆய்வில் உள்ள பல முற்றிலும் டிஜிட்டல் மீடியாக்கள், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் இருந்து, பாலின சமத்துவத்தை ஆதரிப்பதில் இருந்து, ஊழல் நிறைந்த அரசு அதிகாரிகளை அவமானத்தில் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்துவது வரை, குறிப்பிடத்தக்க நிஜ உலக விளைவுகளைக் கொண்ட கதைகளை உருவாக்கியுள்ளன.
எங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை நாங்கள் பகிர்ந்து கொள்வதற்கு காரணம் இந்த ஊடகத் தலைவர்கள் கொடுமையான சக்திகளை எதிர்த்துப் போராடும்போது பாதுகாப்பாக இருக்க நம் உதவிக்கு தகுதியானவர்கள். அத்துடன் நிதி உதவி மற்றும் பயிற்சிகளுக்கும் தகுதியானவர்கள். இவற்றுடன் தங்கள் சமூகங்கள் மற்றும் ஜனநாயக நாடுகளுக்கு வரும் பல்லாண்டுகளுக்கு சேவை செய்யும் பல நெகிழ்ச்சியான சுயாதீன ஊடக நிறுவனங்களை உருவாக்க முடியும்.
அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களின் சரளத்தின் கீழ் வேலை
இந்த புதிய ஊடக முயற்சிகள் ஸ்டார்ட்அப்களுக்கு பொதுவான பல சவால்களை எதிர்கொள்கின்றன, ஆனால் அவை பெரும்பாலும் இணையதள தாக்குதல்களிலிருந்து உடல்ரீதியான வன்முறை வரை மற்ற வணிக நிறுவனர்களால் சிந்திக்க முடியாத சூழ்நிலைகளில் இயங்குகின்றன.
மூன்று பிராந்தியங்களையும் எடுத்துக்கொண்டால், இந்த ஆய்வில் பங்கேற்ற ஊடக நிறுவனங்களில் 51% டிஜிட்டல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறின, 40% அவர்கள் செய்த வேலைக்காக அச்சுறுத்தப்பட்டதாகக் கூறினர் – பெரும்பாலும் வாரந்தோறும் இல்லையென்றால் தினசரி அடிப்படையில்.
இணையதள துன்புறுத்தல் எந்த அளவுக்கு பரவலாகிவிட்டது என்றால், நாங்கள் பேட்டி எடுத்த பல நிறுவனங்கள் அவர்கள் தொடர்ந்து ட்ரோலிங் மற்றும் பிற வகையான இணையதள துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டதாகக் கூறின – முதன்மையாக சமூக ஊடகங்கள் வழியாக.
முற்றிலும் டிஜிட்டல் ஊடகங்கள் எப்படி 2019 மற்றும் 2020 ல் வருவாயை உருவாக்கின
தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் முற்றிலும் டிஜிட்டல் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நன்கு புரிந்துகொள்ள, 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டிற்கும் வருவாய் ஆதாரங்கள் மற்றும் செலவுகள் பற்றிய விரிவான கேள்விகளைக் கேட்டோம்.
தொற்றுநோயால் ஏற்படக்கூடிய தற்காலிக முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, 2019 முதல் கூடிய தரவைப் பயன்படுத்துகிறோம். குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தபோதுதான் 2020-இலிருந்து கண்டுபிடிப்புகளை நாங்கள் சேர்த்தோம்.
இந்த ஆய்வில் உள்ள அனைத்து ஊடகங்களும் எங்கள் வருவாய் மற்றும் நிதி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை என்பதையும், தனியுரிமை பற்றி நாங்கள் உறுதியளித்த போதிலும், சிலர் பதிலளிக்க மறுத்தனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதன் விளைவாக, இந்த அறிக்கையில் வழங்கப்பட்ட நிதி எண்கள், நாங்கள் பேட்டி செய்த 201 ஊடகத் தலைவர்களில் 141 பேரிடம் இருந்து கற்றுக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகளை சிறப்பாக ஒப்பிட்டுப் பார்க்க, வருவாய் மற்றும் செலவுகள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்பட்டன, அறிக்கையிடப்பட்ட ஆண்டிற்கான சராசரி மாற்று விகிதங்களைப் பயன்படுத்தி.
இந்த ஆய்வில் உட்பட்ட மூன்று பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து ஊடகங்களிலும், இரண்டு ஆண்டுகளாக சிறந்த வருவாய் பிரிவுகள் இவை, இந்த வரிசையில்: மானியங்கள், விளம்பரம், ஆலோசனை சேவைகள், உள்ளடக்க சேவைகள், மற்றும் வாசகர் வருவாய்.
|
|
|
|
| |||||
| 28.08% | 30.75% | $48,258 | $63,597 | |||||
| 23.32% | 20.81% | $27,903 | $27,323 | |||||
| 11.96% | 10.26% | $17,664 | $27,770 | |||||
| 8.28% | 6.86% | $10,492 | $14,066 | |||||
| 8.27% | 6.49% | $23,180 | $21,834 |
*இந்த எண்கள் ஒரே மாதிரியான ஆதாரங்களை உச்ச வகைகளாக இணைக்கின்றன.
- மானியங்கள்: தனியார் அறக்கட்டளைகள், பரோபகார முதலீட்டாளர்கள் மற்றும் Google மற்றும் Facebook உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் அனைத்து மானிய நிதிகளும், வெளிநாட்டு மற்றும் தேசிய அரசாங்க நிறுவனங்களின் மானியங்களும் அடங்கும்
- விளம்பர வருவாய்: Google Adsense, துணை விளம்பரங்கள், நிரல் சார்ந்த விளம்பர வலையமைப்புகள், உபயம் செய்யப்பட்ட உள்ளடக்கம், சொந்த விளம்பரங்கள், மற்றும் நிறுவனங்களால் மற்றும் பணியாளர்களால் விற்கப்படும் விளம்பரங்கள் உட்பட, தெரிவிக்கப்பட்ட அனைத்து விளம்பர ஆதாரங்களும் அடங்கும்.
- உள்ளடக்க சேவைகளின் வருவாய்: உள்ளடக்க உரிமைக் குழுவாக்கம், பிற மீடியாக்களுக்காக உருவாக்கப்பட்ட தனிப்பட்ட உள்ளடக்கம், மீடியா அல்லாத வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பு அல்லது தொழில்நுட்பச் சேவைகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவை அடங்கும்.
- வாசகர் வருவாய்: சந்தாக்கள், உறுப்பினர் கட்டணம், செய்திமடல் சந்தாக்கள், தனிநபர்களிடமிருந்து நன்கொடைகள், க்ரவுட் ஃபண்டிங் மற்றும் நிகழ்ச்சி டிக்கெட் விற்பனை ஆகியவை அடங்கும்
2016 ஆம் ஆண்டில் லத்தீன் அமெரிக்காவில் எங்கள் முதல் ஆய்வில் பங்கேற்ற ஊடகங்களில் 16% ஊடகங்களால் மட்டுமே மானிய நிதி பெற்றன. அதனால் இந்த ஆய்வில் வருவாய் ஆதாரங்களில் மானிய நிதி முக்கியமான ஒன்றாக இடம்பெற்றது தனித்து நின்றது.
2019 ஆம் ஆண்டு ஆய்வில் மூன்று பிராந்தியங்களிலும் அனைத்து ஊடகங்களிலும் மானிய நிதி ஆதரவு மொத்த வருவாயில் 28%. 2020 இல் 31% வரை கூடியுள்ளது. ஒரு ஊடகத்திற்கு மானிய நிதி அளவு 2019 இல் சுமார் $ 48,000 இலிருந்து 2020 இல் $ 63,000 க்கு மேல் உயர்ந்தது. லத்தீன் அமெரிக்காவில் மானிய ஆதரவு இன்னும் அதிகமாக இருந்தது.
தனிப்பட்ட உரையாடல்களில், நன்கொடையாளர்கள் மற்றும் அடித்தளங்கள் பெருகிய முறையில் சுயாதீன ஊடகங்கள் மானிய நிதியை அதிகமாக நம்பியிருப்பதை குறித்து கவலைப்படுவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அந்த கவலைகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். இருப்பினும், நன்கொடையாளர்களின் ஆதரவு மற்றும் பரோபகார முதலீடு அதிகரித்தது இந்த டிஜிட்டல் தொழில்முனைவோருக்கு தொற்றுநோய் சம்பந்தப்பட்ட பொருளாதார அழிவை எதிர்கொள்ள உதவியதில் ஒரு பகுதியாகும் என்று நம்புவதற்கு காரணம் உள்ளது.
இந்த கண்டுபிடிப்பை சரியாக புரிந்துகொள்ள, இந்த ஊடகங்கள் சிறிய பட்ஜெட்களுடன் செயல்படுவதை கருத்தில் கொள்ளவேண்டும். இதனால் கொஞ்சம் நிதி கூட நீண்ட தூரம் செல்ல முடியும்.
இந்த ஆய்வில் பங்கேற்ற ஊடகங்களில் 60% க்கும் அதிகமானவை 2019 ஆம் ஆண்டில் $50,000 க்கும் குறைவாகவே மொத்த வருவாயாக சம்பாதித்துள்ளதாகவும், 8% ஊடகங்கள் முற்றிலும் வருவாய் இல்லை என்றும் தெரிவித்தனர். அதாவது அவர்கள் முழுக்க முழுக்க தன்னார்வலர்களை சார்ந்துள்ளனர்.
ஆனால் அவை அனைத்தும் சிறிய ஊடகங்கள் அல்ல. 2019 இல் மூன்று பிராந்தியங்களிலும், 36% க்கும் அதிகமான ஊடகங்கள் வருடாந்திர வருவாய் $100,000 க்கும் அதிகமாகவும், 15% சராசரி ஆண்டு வருமானம் $1 மில்லியனுக்கும் மேல் அறிக்கை செய்தனர.
ஏறக்குறைய 25% ஊடகங்கள் ௨௦௨௦ ஆண்டை செலவுகளுக்குப் பிறகு ஓரளவு லாபத்துடன் முடித்திருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
விளம்பர வருமானம் மிக முக்கியமான வருவாய் வகைகளில் நெருக்கமான இரண்டாவது இருந்தது. மேலும், ஒரு நிறுவனத்திற்கு சராசரி விளம்பர வருவாய் 2019 இல் $ 28,319 ஆகவும், 2020 இல் $ 27,323 ஆகவும் ஓரளவு நிலையாக இருந்தது.
வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் ஊடகங்கள் எவ்வாறு வணிக மாதிரிகளை உருவாக்குகின்றன என்பதை நன்கு புரிந்துகொள்ள, நாங்கள் 30 வகையான வருவாய் ஆதாரங்களின் பட்டியலை உருவாக்கினோம். இதை ‘வணிக மாதிரிகள் உருவாக்குதல்’ என்ற அத்தியாயத்தில் விவரித்துள்ளோம்.
அதிக சுதந்திரம் மற்றும் நிலைத்தன்மைக்காக நாங்கள் பலதரப்பட்ட வருவாய் ஆதாரங்களை நீண்டகாலமாக பரிந்துரைத்துள்ளோம், ஆனால் ஒவ்வொரு ஊடகமும் எத்தனை ஆதாரங்களைக் கொண்டிருந்தன மற்றும் அவற்றின் வருடாந்திர வருவாயை அது எவ்வாறு பாதித்தது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தபோது, கூடிய ஆதார வகைகள் எப்போதும் சிறந்தது அல்ல, இரண்டு முதல் ஆறு வருவாய் ஆதாரங்கள் உகந்தவை என்று கண்டுபிடித்தோம்.
ஆறுக்கும் மேற்பட்ட ஆதாரங்களைப் குறிப்பிட்டவர்கள் அதிகம் சம்பாதிப்பது அவசியமில்லை. இது பல தொழில்முனைவோர்களிடையே ஒரு பொதுவான சவாலாக நாங்கள் பார்க்கிறோம்: ஒரே நேரத்தில் பல வேலை திட்டங்களை எடுத்துக்கொள்வது வெற்றியைத் தடுக்கலாம்.
பல்வேறு திறன்களைக் கொண்ட அணிகள் அதிக வருவாய் ஈட்டுகின்றன
இந்த முதன்மையாக பத்திரிகையாளர் தலைமையிலான ஊடக நிறுவனங்களை நாங்கள் முதலில் ஆய்வு செய்தபோது நாங்கள் கண்டெடுத்த மிகவும் வியத்தகு கண்டுபிடிப்புகளில் ஒன்று, குறைந்தபட்சம் அந்த வேலையை மட்டும் கவனிக்கக்கூடிய ஒரு விற்பனையாளர் அல்லது வணிக மேம்பாட்டு நபரை தங்கள் குழுக்களில் சேர்ப்பதன் தாக்கமாகும்.
இந்த விரிவாக்கப்பட்ட ஆய்வில், இது மூன்று பகுதிகளுக்கும் பொருந்தும் என்பதைக் கண்டறிந்தோம். 2019 ஆம் ஆண்டில் ஒரு விற்பனையாளரை சம்பளம் கொடுத்து பணியில் வைத்திருந்த நிறுவனங்கள், இல்லாதவர்களை விட ஆறு முதல் ஒன்பது மடங்கு அதிக வருவாயைப் பெற்றனர்.
இந்த முறை அவர்கள் எவ்வளவு சம்பளம் கொடுத்து இவர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் கேட்டோம். விற்பனை மற்றும் வணிக மேம்பாட்டு பணிகளுக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு $200 முதல் $2,000 வரை என்றும், மொத்தத்தில் இடைநடு சம்பளம் $733 என்றும் கண்டறிந்தோம்.
வருவாயை கூட்டுவதற்காகவே ஊதியம் பெறும் தொழிலாளி ஒருவரை வைத்திருப்பதின் வியத்தகு தாக்கம், அதுவும் இந்தச் சந்தைகளில் ஓரளவு குறைந்த உழைப்புச் செலவு என்று பார்த்தல், விற்பனை மற்றும் வணிக துறைகளை சேர்ந்தவர்களை நிறுவனத்தில் சேர்த்துக்கொள்வது எங்கள் தலையாய பரிந்துரைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இடம்பெறுகிறது.
மற்ற புதிய கண்டுபிடிப்புகள் மத்தியில், தொழில்நுட்பம் அல்லது நூதன
தலைவர் கொண்ட ஊடக நிறுவனங்கள் மூன்று மடங்கு அதிக வருவாயைப் பெற்றுள்ளன-அவர்கள் அணியில் விற்பனையாளர் இல்லாவிட்டாலும் கூட.
அதிக எண்ணிக்கையிலான பெண் உரிமையாளர்கள் மற்றும் சிறுபான்மை உரிமையாளர்கள்
அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா மற்றும் மெக்சிகோவில் நாங்கள் பேட்டி எடுத்த 100 டிஜிட்டல் பூர்வீக ஊடகங்களில் 38% பெண் நிறுவனர்களை கொண்டுள்ளன என்பது எங்கள் முதல் இன்ஃப்ளெக்ஷன் பாயிண்ட் அறிக்கையின் மிகவும் ஈர்க்கக்கூடிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
இந்த கண்டுபிடிப்பு அற்புதமானது, ஏனெனில் இந்த புதிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் மேஜையில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை விட அதிகமான பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வணிகம் செய்யும் ஊர்களில் தொலைக்காட்சி மற்றும் செய்தித்த்தாள் ஊடகங்களில் பெண்களின் உரிமை 1% 1% வரை குறைந்திருக்கிறது.
இந்த ஆய்வில், நாங்கள் ஆய்வு செய்த 201 நிறுவனங்களின் 32% நிறுவனர்கள் பெண்கள் என்பதைக் கண்டறிந்தோம், இருப்பினும் எண்ணிக்கை பிராந்தியத்தின் அடிப்படையில் வேறுபட்டது மற்றும் ஆப்பிரிக்காவில் மிகவும் குறைவாக இருந்தது.
25% பேர் தங்கள் நிறுவனர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது தங்கள் நாட்டில் சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறியுள்ளனர்: லத்தீன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30%, தென்கிழக்கு ஆசியாவில் 25% மற்றும் ஆப்பிரிக்காவில் 20%.
இந்த அறிக்கையை யார் படிக்க வேண்டும்
டிஜிட்டல் ஊடக தொழில்முனைவோருக்கு உதவும் நோக்கத்துடன் இந்த அறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம், ஆனால் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் பாரம்பரிய ஊடக வணிக மாதிரிகளைத் தொடர்ந்து சிதைத்து வருவதால், பாரம்பரிய ஊடகத் தலைவர்களும் இந்த நுண்ணறிவுகளிலிருந்து பயனடையலாம்.
டிஜிட்டல் நேட்டிவ் மீடியாவின் ஓரளவு குறுகிய வரலாற்றில் இன்னுமொரு ஊடுருவல் புள்ளியாக இந்த அறிக்கையை வெளியிடுகிறோம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். தவறான தகவல்களை எதிர்த்துப் போராடி, தங்கள் சமூகங்களுக்கு முக்கிய செய்திகளை கொண்டுசேர்க்க இந்த ஊடகங்கள் பணிபுரிவது மட்டுமில்லாமல் அவர்கள் தங்கள் நாடுகளில் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டும். அதே நேரத்தில் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களின் சரமாரியை எதிர்கொள்கிறார்கள்.
இந்த அறிக்கையில் உள்ள நுண்ணறிவுகள், பரிந்துரைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஊடகத் தலைவர்கள், நிதியளிப்பவர்கள், கல்வியாளர்கள் மற்றும் இந்த ஊடகங்கள் வளர, புதுமைப்படுத்த, அவர்களின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வழிகளில் தங்கள் சமூகங்களை நன்கு அறிவிக்க உதவும் எங்கள் பணியைப் பகிர்ந்துகொள்ளும் மற்ற எல்லோருக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் என்று நம்புகிறோம்.